
இந்த உலகத்தில் இரு வகையான மக்கள் இருக்கிறார்கள்.
முதல் வகை மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், மற்றொறு வகை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்.
இதில் நான் மூன்றாவது வகை. இதை இறைதாசன் மற்றும் இறைப்பற்றாளன் என்று அழைக்கலாம்.
இது சற்றே கடவுள் நம்பிக்கை கொண்டவரிடம் இருந்து மாறு பட்டது.
ஒரு விஷயத்தில் சிறிது சந்தேகம் வந்தும், அதை நம்புவதே நம்பிக்கை. இந்த அடிப்படையில் எல்லா மக்களுக்கும் இறைவன் மீது சிறு ஐயமுண்டு.
எனக்கு இறைவனின் மீது சிறிது ஐயமும் இல்லாததால், நான் ஒரு இறைதாசன்.