இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்தும் என் எண்ணச்சிதறல்களின் வருணணையே...

Saturday, January 1, 2011

வாழ்க மழை



முல்லை பூவாடையை ஏந்தி வந்த சில்லென்றக் காற்று

மின்னல் இல்லாத அமைதியான வானம்

பகலை இரவாக்கிய கார்மேகங்கள்

மழலையை முத்தமிடும் அன்னைபோல் மெதுவாய் நினைந்த பூமி

சட சடவென என் கதவைத் தட்டிய சாரல் மழை

நினைந்து வாசலல்ல என் இதயம்

சாரல் மழை அவள் நினையூட்டியது

வாழ்க மழை !!!

Thursday, December 30, 2010

நான் எழுதிய அடுத்த பாடல் இது


பல்லவி


மீண்டும் ஒரு பார்வை அவள் வீசி செல்கின்றாள்

பார்க்கும் போதெல்லம் ஒரு புன்னகை புரிகின்றாள்


வள் பெயர் என்ன ? தெரியாதே

ரென்ன ? தெரியாதே

வயதென்ன ? தெரியாதே

வாழ்க்கை முறை ? தெரியாதே


காதலியே காதலியே என் பக்கம் நீ வாராதே

ண்களின் வழியே சென்று மூளையை ீ தின்னாதே

கண்மணியே கண்மணியேன்னை நீ பார்க்கதே

என் வாழ்வின் ஒரு நொடியும்னக்காக கிடையாதே


மீண்டும் ஒரு பார்வை அவள் வீசி செல்கின்றாள்

பார்க்கும் போதெல்லம் ஒரு புன்னகை புரிகின்றாள்


சரணம் -1

காதல் வரும் ஒரு நிமிடம்

துன்பம் அதனால் பல தருணம்


ஆதாம் செய்த ஒரு தவறை

நானும் ஏன் செய்ய வேண்டும்


மீண்டும் ஒரு பார்வை அவள் வீசி செல்கின்றாள்

பார்க்கும் போதெல்லம் ஒரு புன்னகை புரிகின்றாள்


சரணம் -2


அதிகாலையில் நீ எழுந்தால்

வானவில்ன்னை வரவேற்க்கும்


சாலையின் நடுவே நீ நடந்தால்

மேகங்கள்னக்குக் குடைப் பிடிக்கும்


ன்னை பிடிச்சிருக்கு ! பிடிச்சிருக்கு !

இருந்தும் நீ தேவை இல்லை....


காதலியே காதலியே என் பக்கம் நீ வாராதே

ண்களின் வழியே சென்று மூளையை ீ தின்னாதே

கண்மணியே கண்மணியேன்னை நீ பார்க்கதே

என் வாழ்வின் ஒரு நொடியும்னக்காக கிடையாதே !!!

தவறும் தவறில்லை






ஒரு உயிரை கொண்ரு இன்னுரு உயிரை வாழவைப்பதில் அர்த்தமில்லை


ஒருவரை அவமானப் படுத்தி இன்னொருவரை பெருமைப் படுத்துவதில் பயனில்லை


ஒருவர் உழைப்பில் இன்னொருவர் பலன் பெருவது ஞாயம் இல்லை


ஒருவரின் சொத்தை இன்னொருவர் பறிப்பது நீதி இல்லை


ஆனால் இவ்வனைத்தும் தர்மத்தை நிலைநிறுத்தவோ அல்லது தாயின் கட்டளையின் நிமித்தம் செய்தாலோ அது பாவமில்லை.


Wednesday, December 29, 2010

திருமால் திருவடி



பரிவன்புடன் இருக்கும் தாயின் மடியை தேடி ஓடும் வரும் குழந்தைக்கும்

திருமாலின் திருவடியை நாடி செல்லும் அடியாருக்கும் - அளவில்லா இன்பம் உறுதியானது.






Monday, December 27, 2010

Unlimited Meals

யாதுமானவன் என் தாயுமானவன்





என் உயிரிலும் மேலான அன்னை, என் இறைவன்

என்னை அனுதினமும் காக்கும் தந்தை, என் இறைவன்

என்னை நேசிக்கும் தங்கை, என் இறைவன்

என்னுடைய சிறந்த நண்பன், என் இறைவன்

அறிவைப் புகட்டும் குரு, என் இறைவன்

எனக்கு உள்ளும் புறமும் இருந்து ஆட்சி செய்பவன், என் இறைவன்

யாதுமானவன் என் தாயுமானவன் அவன்,

ஸ்ரீ ராம் !!!

Monday, December 20, 2010

Thirumala Dancing Fountain



There is a beautiful Dancing Fountain show conducted behind Thirumala Temple. This one hour show will start at 7.oopm IST. So don't miss next time when you visit Thirumala Temple.