
முல்லை பூவாடையை ஏந்தி வந்த சில்லென்றக் காற்று
மின்னல் இல்லாத அமைதியான வானம்
பகலை இரவாக்கிய கார்மேகங்கள்
மழலையை முத்தமிடும் அன்னைபோல் மெதுவாய் நினைந்த பூமி
சட சடவென என் கதவைத் தட்டிய சாரல் மழை
நினைந்தது வாசலல்ல என் இதயம்
சாரல் மழை அவள் நினையூட்டியது
வாழ்க மழை !!!