காதல் நீரென்றால் நான் அதில் ஒட்டா எண்ணையாவேன்,
காதல் பனி என்றால் அதை விலக்கும் கதிரவனின் ஓளியாவேன்.
காதல் ஊசியானால் அதன் உடைந்த காது நானாவேன்.
காதல் நிலவானால் நான் நிலவில்லா வானமாவேன்.
நான் காதலின் எதிரியல்ல, அனால் சமீபக் காலங்களில்
அதன் மீதுள்ள பற்று சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.
இதுதான் என்னுடைய இன்றைய நிலை...
இது இப்போதுவேண்டுமானாலும் மாறலாம்,
நானும் ஒரு சராசரி மனிதன் தானே