Sunday, August 14, 2011
தமிழ் வணக்கம்!!! தமிழுக்கு வணக்கம்!!!
உன்னை நான் முதலில் வெறுத்தேன்.....பின்னர் சாடினேன்....
என் வாழ்வில் உன்னை ஏன் அடைந்தேன் என்று மனம் வாடினேன்...
உன்னை விட்டு விலகி சென்றேன்..
உன்னை சார்ந்த நினைவை மறக்க முயன்றேன்...
என் வாழ்கையின் பாதையில் போக ஆரம்பித்தேன்.
ஆனால், நீ என்னை என்றும் விரும்பினாய்
என் வாழ்வின் எல்லா தருணங்களிலும் என் அருகிலேயே இருந்தாய்,
என் ஞானத் தீபத்தின் சுடராய் இருந்தாய்,
நான் விருப்பப் பட்டப் பாதையில் என் வாழ்கையை மாற்றினாய்...
தாயே, தமிழே, தமிழ் அன்னையே,
உன் பாதங்களை நான் பற்றிக் கொண்டேன்.
உன் மீது நான் கொண்ட அறியாமையின் பொருட்டு என்னை வெறுத்திடாதே...
திருமூலருக்கும், மாணிக்கவாசகருக்கும் கொடுத்த ஞானத்தை எனக்கு கொடு.