பல்லவி
என் தென்றலே உன் சுவசத்தில்

நான் மூழ்கிப் போனேனே...
என் கீதமே உன் ராகத்தில்
நான் என்னைத் தொலைத்தேனே....
விழியோடு முளைத்தக் காதல்
இமை முடினும் இருளாதே
உயிரொடு வளர்ந்த காதல்
மரித்தாலும் மரியாதே....
என் தென்றலே....என் தென்றலே.....
உன் வாசம் வீசும் பாதையில் வருகிறேன்
என் வாழ்வின் பாதியை உன்னிடம் கொடுக்கின்றேன்.
சரணம் - 1
உன்னால் நிலவே...உன்னால் நிலவே...
என் இரவுகல் என்றும் நீள்கிறதே.

உன்னால் உயிரே...உன்னால் உயிரே...
என் நிழலும் சுமையாய் மாறியதே
என் ஆதி அந்தம் தெரிகிறதே
என் வாழ்வின் அர்த்தம் புரிகிறதே
காத்திருந்தேன் நான் தனிமையிலே
உன் வருகையினால் பனி விலகியதே
என் உடலும் நீதானே...அதன் ஜீவன் நீதானே...
என் இளக்கும் நீதானே...சேரும் வழியும் நீதானே...
என் மூச்சுக் குழாயிள் தென்றலே நீதானே...
மாறிவரும் இரவும் பகலும் அன்பே நீதானே...
நீதானே.........நீதானே................
மீண்டும் பல்லவி
என் தென்றலே உன் சுவசத்தில்
நான் மூழ்கிப் போனேனே...
என் கீதமே உன் ராகத்தில்

நான் என்னைத் தொலைத்தேனே....
விழியோடு முளைத்தக் காதல்
இமை முடினும் இருளாதே
உயிரொடு வளர்ந்த காதல்
மரித்தாலும் மரியாதே....
என் தென்றலே....என் தென்றலே.....
உன் வாசம் வீசும் பாதையில் வருகிறேன்
என் வாழ்வின் பாதியை உன்னிடம் கொடுக்கின்றேன்.