இந்த வலைப்பதிவில் உள்ள அனைத்தும் என் எண்ணச்சிதறல்களின் வருணணையே...

Thursday, September 11, 2008

காதலுக்கு கண்கள் உண்டா ??


உன் மொழியால் என்னை கவர்ந்து ஈர்தாய் - தொலைந்தேன்
உன் விழியால் என்னை கைது செய்தாய் - வியந்தேன்
உன் இதய அறையில் என்னை அடைத்தாய் - உறைந்தேன்
வெறும் முத்தங்கள்தான் உனக்கு உணவு என்றாய் - மகிழ்ந்தேன்
என் உடல், பொருள், ஆவி நீ என்றாய் - நெகிழ்ந்தேன் ........



ஆனால் காதல் ! பொய் .. பொய் .. வெரும் பொய் என்றேன் !
என் தாயின் அன்பே சிறந்தது என்றேன் நான் .....

ஆனால் அவள் ....
--

--

--

நானும் உனக்கு இன்னொரு தாய்தானே என்றால் !!!!!!!!!
ஆஹா ! ஆஹா !
இதுதான் காதலோ ! ! என்ற வியப்பில் நான்...
இதுவே காதல் என்ற விளக்கத்தில் அவள்...


காதலுக்கு கண்களில்லை என்பார்கள், அது உண்மைதான்....
காதல் மதம் பார்ப்பதில்லை
இனம் பார்ப்பதில்லை
மொழி பார்ப்பதில்லை
நிறம் பார்ப்பதில்லை


ஆம் காதலுக்கு கண்களில்லை....
ஆனால் காதலுக்கு உயிருண்டு,
உணர்வுண்டு,
அன்புண்டு,
ஏன் காதலுக்கு தாய்மையும்கூட உண்டு ........



`